Monday, December 16, 2013

கல்வியின் குறிக்கோள்

  • மனிதனுக்குள் புதைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவது தான் கல்வியின் குறிக்கோள்.
  • மன உறுதியும், அதை வெளிப்படுத்தும் விதமும், பயன்தரும் விதத்தில் மனஆற்றலை அமைப்பதும் பயிற்சிகள் கல்வியில் இடம்பெற வேண்டும். 
  • வெறும் புள்ளிவிபரங்களைச் சேமிப்பதில் பயனில்லை. மனதை ஒருமுகப்படுத்துவதாக கல்வித்திட்டம் அமையவேண்டும். 
  • மூளைக்குள் பல்வேறு விஷயங்களைத் திணித்து வைப்பதால் யாருக்கும் பயனில்லை. அவை ஜீரணமாகாமல் வாழ்நாளெல்லாம் தொந்தரவையே கொடுக்கும்.
  • தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனைத் தன் சொந்தக்கால்களில் நிற்கும்படி செய்வதில் தான் கல்வியின் உண்மையான வெற்றி இருக்கிறது.
  • ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துக்களைக் கிரகித்துக் கொண்டு அவற்றை வாழ்வில் சரிவரக் கடைபிடித்தால் கூட, கல்வி கற்ற பயன் ஒருவருக்கு கிடைத்துவிடும்.
  • சிங்கம் போன்ற மன உறுதி, நல்ல ஒழுக்கம், பிறருக்கு உதவி புரியும் குணம் ஆகியவையே கல்வி பெற்றதன் அடையாளங்கள்.

No comments:

Post a Comment