Saturday, December 21, 2013

பெண்களுக்கு டென்ஷன் வந்தால் என்ன தான் செய்கிறோம்.

சில பெண்களுக்கு டென்ஷன் வந்தால் தான் என்ன செய்கிறோம் என்றே அவ‌ர்க‌ளுக்கு தெரியாது.கோபத்தில் என்ன பேசினார்கள் என்று கூட தெரியாது. அவர்கள் கோபம் முழுவதும் பிள்ளைகள் மேல தான் போய் விழும். வீட்டுக்காரர் மேல கோபமா?

பக்கத்து வீட்டு அம்மா மேல கோபமா? வீட்டில் உள்ள பெரியவர்கள் மேல உள்ள கோபமா? யார் மீது கோபம் வந்தாலும் பிள்ளைகளுக்கு தான் அடி விழும். பிள்ளைகளுக்கும் எதுக்கு அடி வாங்குகிறோம் என்று அவர்களுக்கு தெரியாது.

ரொம்ப கோபப்படுபவரிடம் ரொம்ப கோபப்பட்டா தோல் சுருங்கி சீக்கிரம் வயதான தோற்றம் வந்து கிழவி போல் ஆகி விடுவீர்கள் என்று சொல்லி பாருங்கள், அடுத்ததடவை கோபப்படும் போது கொஞ்சம் யோசிப்பார்கள். சில பேர் நகத்தை நறுநறுவென கடித்து கொண்டு இருப்பார்கள்.

நகம் தீர்ந்து ரத்தம் வருவது கூட தெரியாமல் இருப்பார்கள். இப்படி கோபப்படுவதால் உஙகளுக்கு சிறு வயதிலேயே இரத்த அழுத்தம் எகிறும் நிலைக்கு கொண்டு போய் விடும்.

இல்லை எனில் அடிக்கடி மயக்கம் வரும். வீட்டில் மயக்கம் போட்டு விழுந்தால் பரவாயில்லை தனியாக எங்கும் வெளியில் செல்லும் போது மயக்கம் போட்டு விழுந்தால் உங்கள் நிலையை கொஞ்சம் நினைத்து பாருங்கள். ஹார்ட் அட்டாக்கே வரலாம்.

கோபபட்டு எதையும் சாதிக்க போவதில்லை வீண் மனஸ்தாபத்தை தான் விலைக்கு வாங்கி கொள்ளனும்.. பொறுமையை கையாளுங்கள் கோபத்தை தவிருங்கள். . இப்படிபட்ட கோபத்தை தவிர்க்க எவ்வளோ நல்ல விஷயங்கள் இருக்கு அதில் நம்மை திசை திருப்பலாம்.

துணி தைப்பது, விதவிதமாக ஆர்ட் வொர்க் செய்வது, வித விதமாக சமைப்பது, பிடித்த இசை கேட்பது, இது போல் நம்மை நாமே பார்த்துகொண்டால் கோபப்பட நேரம் கூட இருக்காது.

No comments:

Post a Comment