Wednesday, January 1, 2014

கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள்

1.     நண்பர்களை நமது தெருவில் எதாவது ஒரு கோவில் பிரபலமாகவும்பெரியதாகவும் இறக்கும் நாம் அந்த கோவிலுக்கு தான் அடிகடி சென்று சாமி கும்பிடுவதை வழக்கமாக வைத்திருப்போம்அந்த கோவிலில் எந்த சாமி மெயின் கருவறையில்  ( விஷ்ணுசிவன்முருகன்அம்மன்),  இருந்தாலும் கோவில் கும்பிடும் போது ஒரு சில வழிமுறைகளை பின்பற்றி கும்பிட வேண்டும். எனக்கு தெரிந்த சில வழிமுறைகளை கூறுகிறேன் .

2.     கோவிலின் உள் செல்லும் போதே வெளியில் இருக்கும் பிச்சைகரர்களுக்கு பிச்சை போடா வேண்டும்கோவிலை விட்டு வீடு திரும்பும் போது பிச்சை போடகூடாதுஅது நாம் கோவிலில் வாங்கிய வரத்தை கோவில் வாசலிலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வருவதற்கு சமம் ஆகும்.

3. கோவிலின் உள் சென்றதும் நேராக மெயின் கருவறையில் உள்ள சாமியை கும்பிட்டு தரிசிக்கவோஅர்ச்சனை செய்யவோ கூடாதுமுதலில் கருவறையை சுற்றி உள்ள எல்லா சாமியையும் கும்பிட்டு இறுதியில் தான் கருவறையில் உள்ள சாமியை கும்பிட வேண்டும்.

4.     சாமி கும்பிடும் போது சாமி சிலைக்கு நேராக நின்று கும்பிடகூடாதுசாமிக்கு வலது அல்லது இடது புறமாக நின்று தான் கும்பிட வேண்டும்.

5. நாம் கோவிலில் கும்பிடும் அணைத்து சாமி சிலைகளையும் விழுந்து கும்பிடகூடாதுகருவறை உட்பட அணைத்து சாமியையும் தரிசித்த பிறகு இறுதியில் கொடிமரத்தை கும்பிட்டு கொடிமரத்தின் வலது புறத்தில் தான் விழுந்து கும்பிட வேண்டும்.பின்பு ஒரு இரண்டு அல்லது ஐந்து நிமிடம் கோவிலில் கடவுளை நினைத்து உட்கார்ந்துநேராக நம் வீட்டிற்கு மட்டும் தான் செல்ல வேண்டும்வேறு எங்கும் போக கூடாது.

6. வீட்டிற்கு சென்றதும் கால்களை கழுவக்கூடாதுகோவிலை விட்டு வீட்டினுள் அப்படியை செல்ல வேண்டும். அப்போது தான் கடவுளிடம் நாம் கோவிலில் வேண்டிய வரம் நேராக நமது இல்லத்தில் நிலைத்து இருக்கும்.இதுவே கோவிலில் கடவுளை வணங்கும் முறைகள் ஆகும்.








No comments:

Post a Comment