Thursday, December 12, 2013

‘நகர்ந்து கொண்டே இருந்தால்தான் நதிக்கு அழகு, வளர்ந்து கொண்டே இருந்தால்தான் வாழ்க்கைக்கு அழகு”

‘நகர்ந்து கொண்டே இருந்தால்தான் நதிக்கு அழகு
வளர்ந்து கொண்டே இருந்தால்தான் வாழ்க்கைக்கு அழகு”
முன்னாள் அமெரிக்க அதிபர் கிளின்டன் மிகத் திறமையானவர். அவரைப்பற்றிய நகைச்சுவை. கிளின்டனும் அவரது மனைவியும் ஒரு பயணத்தின் போது வழியில் ஒரு பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தி பெட்ரோல் போடுகிறார்கள். அப்போது அங்கு பெட்ரோல் நிரப்புகின்ற பணியாளிடம் ஹிலாரி கிளின்டன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். நேரம் கடந்து வந்த அவரிடம் “யார் அவன்?” என்றார் கிளின்டன். “என்னோட பால்ய நண்பன். மிகவும் நல்லவன்” என்றார் ஹிவாரி. கிளிண்டன் சற்று வெறுப்புடன் “நீ அவனை திருமணம் செய்திருந்தால் பெட்ரோல்தான் அடித்துக் கொண்டிருப்பாய்” என்றார் நக்கலாக. உடனே ஹிலாரி சொன்னார். “ஒருவேளை அவனைத் திருமணம் செய்திருந்தால் அவன் அமெரிக்க அதிபராக ஆயிருப்பான்”. ஒருவருடைய வளர்ச்சி அவருடன் இணைந்துள்ளவர்களைப் பொருத்து உயர்வடையும். இதையே நிர்வாக மேதை வலியுறுத்தி 8 அம்சங்களை விளக்குகிறார். 

1. நம்பிக்கை வளரும்
ஒரு குழந்தை பிறக்கும் போது பெற்றோரையே சார்ந்திருக்கும். அதன் செயல்களை ஊக்குவித்தால் நம்பிக்கையோடு வளரும். அதைப்போலவே ஒரு நிர்வாகத்தில் சேர்ந்துள்ள புதியவரை ஊக்குவித்தால் அவருடைய நம்பிக்கை வளரும். மேலும் திறமையுடன் செயல்படுவார். அப்படி உக்குவிப்பு கிடைக்காவிடில் அவநம்பிக்கை உண்டாகி திறமையில் பின்தங்கி விடுவார்.

2. சந்தேகம் நீங்கும்
குழந்தையானது நடக்க முயற்சிக்கும் போது சில தடவை தவறி விழும். அப்போ தெல்லாம் அது நடக்க முயற்சிப்பதைப் பாராட்டினால் சுயமாக சீக்கிரமே நடக்கும்.
அதைப்போல ஒரு நிறுவனத்தில் இணைந்தவர், தன்னம்பிக்கையில் தாமாகவே செயல்களைச் செய்யத் தொடங்குவார். அப்போது அவரை குறைகூறி விமர்சித்தால் அவருக்கு தன் திறமையில் சந்தேகம் ஏற்பட்டு செயலில் பின்தங்கி விடுவார்.

3. புதுமையைப் படைக்க முடியும்
குழந்தைகள் வளர வளர புது புதுச் செயல்களை செய்ய முயல்வர். அப்போது பெற்றோர் தூண்டுதலைச் செய்தால் சிறந்த படைப்பாளியாகி விடுவர். அதைப்போல பணியில் இருப்பவர் தன்னுடைய செயல்களைச் சிறப்பாக செய்ய முனையும்போது உற்சாகம் செய்தால் உயர்வாகும். அவரை அடக்கி வைத்தால் குற்றவுணர்வு பெற்று சோர்வடைவார்.

4. தாழ்வு மனப்பான்மை நீங்கும்.
குழந்தையானது புதிய திறமைகளை கற்க ஆரம்பித்தவுடன் எல்லாவற்றையும் கற்று தேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கை உண்டாகும். அதேபோல் பணியாளர் தன் திறமைகளால் தகுதியை உயர்த்த முயலும்போது வெற்றி அடைந்தால் உயர்ந்த மனநிலையை அடைவார். தோல்வியடைந்தால் தாழ்வு மனப்பான்மை உண்டாகும்.

5. தனித்தன்மை வளரும்
ஒரு குழந்தை மேஜராகும் போது (18 வயது) பிறரைச் சார்ந்து வாழாமல் தனக்கென தனித்தன்மை யுடன் திகழ முயற்சி செய்வார். அதைப்போல பணியாளர் நிர்வாகத்தில் தனக்கென தனி முத்திரையைப் பதிக்க முயற்சிக்கும் போது வெற்றி பெற்றால் மிகச் சிறப்பாக உயர்வார். இல்லையேல் சராசரியாகி விடுவார்.

6. தனிமையுணர்வு விலகும்.
வளர்ந்த மனிதன் பிறருடன் நன்கு பழகினால் உறவுகள் வளரும். அதைப்போல ஒரு நிர்வாகத்தில் அனைவரி டமும் சுமூக உறவினை வளர்த்துக் கொண்டால் முன்னேற்றம் வளரும். சுமூக உறவில்லாதபோது தனிமை படுத்தப்படுவார்.

7. தொடர்ந்து வளர்தல்
ஒருவர் வளர்ந்தவுடன் மற்றவர்கள் வளர்ச்சிக் காக உதவினால் முன்னேற்றம் வளர்ந்து கொண்டே வரும். இல்லையே தேக்க நிலையாகிவிடும்.

8. வாழ்க்கை உயர்வு
ஒருவர் முதுமையின்போது தன்னுடைய கடந்த காலத்தைப் பார்க்கும்போது சாதனைகளை படைத்தி ருந்தால் பெருமிதமும் மனநிறைவும் பெறுவார். மாறாக தன்னுடைய துறையில் திருப்தியில்லை என்ற நிலையானால் தன்னுடைய வாழ்க்கையே பயனற்றதாக வருந்துவார்.
 

No comments:

Post a Comment